Tuesday, May 7, 2024

தீவிரமடையும் கொரோனா, 4 வாரங்கள் முழு ஊரடங்கு – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!!

Must Read

கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் பத்தாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையினை அடைந்துள்ளதால் அடுத்த 4 வாரங்களுக்கு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது. தற்போது வரை உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது உள்ள நிலவரப்படி, உலகில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில உள்ளது, இரண்டாவதாக இந்தியா உள்ளது, மூன்றாவதாக பிரேசில் உள்ளது. பிரான்ஸ் 10வது இடத்தில் உள்ளது.

எதிர்மறை எண்ணங்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா?? ஆன்மீக பரிகாரங்கள்!!

தற்போது வரை பிரான்ஸ் நாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த பாதிப்பால் மரணம் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பின் வீரியம் குறைந்து இருந்தது. அதனால் அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. சராசரியாக 20 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு பொது முடக்கம்:

இது இரண்டவது அலையாக கருதப்படுவதால் அந்நாட்டு அரசு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் அடுத்த 4 வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரான் வழங்கியுள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பொது முடக்கம் வரும் 17 ஆம் தேதி முதல் 4 வாரங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 வரை கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த முழு ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு துறைகளில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -