மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை – மத்திய அரசு தகவல்!!

0
medicine allotment for OBC
medicine allotment for OBC

நடப்பு கல்வியாண்டில் (2020-2021) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் பதில் மனுவில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

இடஒதுக்கீடு கோரிக்கை:

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட ஓபிசி பிரிவினருக்கு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக., உட்பட சில கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் முடிவில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குமாறும், அதற்கான வரைமுறைகளை விரைந்து தயாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Chennai_High_Court
Chennai_High_Court

இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் (2020-2021) இந்த உத்தரவு பொருந்துமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் மருத்துவப் படிப்பில் இந்த கல்வியாண்டில் இருந்த ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுமா? அல்லது 27% ஆகவது வழங்கப்படுமா? என கேட்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

Central Govt
Central Govt

இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. இன்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, ‘மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது. இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு உள்ளது’ என கூறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here