அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

0

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி:

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட வைத்து பெரிய சர்ச்சையில் சிக்கிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இரத்தக்குழாய் அடைப்பு போன்ற தீவிர பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவறை தவிர்த்து இருக்கலாம்..,அனுபவமே பாடம் – சொத்து வரியினை செலுத்தினார் ரஜினிகாந்த்!!

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் மறைவிற்கு நேரில் ஆறுதல் சொல்ல காரில் சென்ற வேளாண்துறை அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்றொரு அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது கட்சித் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here