Sunday, May 5, 2024

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்கு விரைவில் டும்..டும் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா??

Must Read

பிரபல நகைச்சுவை நடிகையான வித்யுலேகாவிற்கு நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது.

நகைச்சுவை நடிகை:

தமிழ் திரையுலகில் மிக அரிதாக தான் பெண் நகைச்சுவை நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை வித்யுலேகா. இவர் தமிழ் படங்களில் நடித்த மோகன் ராமன் அவர்களின் புதல்வி ஆவார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “நீ தானே என் பொன்வசந்தம்” படம் மூலமாக அறிமுகமானார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

vidyullekha raman
vidyullekha raman

இவரது யதார்த்த நடிப்பு பலரையும் இவரின் பால் ஈர்த்துள்ளது. அதன் பின், ஜில்லா, வீரம், மாஸ் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். யதார்த்ததுடன் கூடிய நகைச்சுவை நடிகை என்பதால் இவர் அனைவராலும் விரும்பப்பட்டார்.

திருமணம்:

தற்போது , இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மாப்பிள்ளை சஞ்சய் சென்னையில் உடல்நல பயிற்சியாளராக உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. அதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இவரது நிச்சயதார்த்தம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு நடைபெற்றுள்ளது.

மாவட்டங்களிடையே பயணிப்பதால் தனிமைப்படுத்துதல் கிடையாது!!

தனது நிச்சயதார்த்தம் குறித்து வித்யூலேகா கூறுகையில் “நாங்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தான் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றோம். புகைப்படங்கள் எடுப்பதற்காக அதனை அகற்றியுள்ளோம். எங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்” என்று மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -