மாவட்டங்களிடையே பயணிப்பதால் தனிமைப்படுத்துதல் கிடையாது – தமிழக அரசு அறிவிப்பு!!

0
bus
bus

செப்டம்பர் 1 முதல் அனைத்து விதமான போக்குவரத்தும் இயக்கப்பட்ட நிலையில் வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு

மார்ச் 24 இல் முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் நான்காவது கட்டமாக தளர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டங்களுக்கு செல்பவர்கள் முகாமில் தனிமை படுத்தப்பட்டனர். மேலும் வேறு மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவைப்பட்டது. இதனால் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

வியாபாரிகள்
வியாபாரிகள்

ஆனால் தற்போது இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு மாவட்டங்களுக்கு செல்லும் அனைவர்க்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது.

 சமூக முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி
சமூக முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி

ஆனால் சமூக முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது கட்டாயமாகும். பல தளர்வுகள் விதிக்கப்பட்டாலும் நாம் நம் சுய கட்டுப்பாட்டை மேற்கொள்வது கடமையாகும். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும். நோய் தோற்று இல்லை என்பதற்கான சான்றிதழும் கட்டப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here