Wednesday, May 15, 2024

நாட்டின் ஜிடிபி மைனஸ் 24 சதவீதமாக சரிவு – தலைவர்கள் கண்டனம்!!

Must Read

ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு -23.9 சதவீதமாக சரிந்துள்ளது.

ஜிடிபி எனப்படுவது:

ஜிடிபி (Gross domestic product) எனப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பதாகும். இது நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் ஜிடிபியை கணக்கிடுகிறது.

ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான ஜிடிபி கணக்கீடு மத்திய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு ஜிடிபி -23.9 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும், உற்பத்தித்துறையில் -39.3 சரிவையும், சுரங்கத்துறையில் -23.3 சதவீத சரிவையும் ஜிடிபி சந்தித்துள்ளது.

செப்.,30-க்குள் ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்??

gdp fall in 2020
gdp fall in 2020

இது 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. இந்த சரிவு தொடரந்தால் மேலும் ஜிடிபி சரிவடையும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தலைவர்கள் கண்டனம்:

இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தங்கள் டிவீட் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மோடி அரசினை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது ” நம் நாடு 40 வருடங்களில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. நான் இது குறித்து பல முறை எச்சரித்தேன் ஆனால், அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.” என்று ராகுல் காந்தி தனது டீவீட்டில் தெரிவித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதே போல் அரசியல் பிரமுகரும் முன்னாள் நிதிஅமைச்சருமான பா.சிதம்பரம் தனது டீவீட்டில் “பொருளாதார நிலையை தவறாக கையாள்வதில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு அடுத்தபடியாக பிரதமர் மோடி உள்ளார். உலகின் வலிமையான பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மோடி தலைமையிலான அரசு சரித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -