தாய்லாந்து ஓபன் 2024: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!!

0
தாய்லாந்து ஓபன் 2024: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!!
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த மே 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை மலேசியா ஜோடியான  நூர் முகமது மற்றும் டான் வீ கியோங் எதிர்த்து போட்டியிட்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தினர்.
இதில் முதல் செட்டை இந்திய இணை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2வது செட்டில் கடும் போராட்டத்துக்கு பிறகு இந்திய இணை  21-13 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் காரணமாக (2-0) என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here