ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்?? தமிழக அரசு திட்டம்!!

0
Online exams
Online exams

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யுஜிசி வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 30 க்கு முன்னர் அரசு தேர்வுகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாண்டு தேர்வுகள்:

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்துவது குறித்து பல்வேறு மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இறுதி ஆண்டு தேர்வின் காலம் மற்றும் கேள்விகளின் வகை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆன்லைன் தேர்வுகளில் அதிகபட்சம் ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் இடம் பெற வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

UGC
UGC

கூட்டத்தில் பங்கேற்ற ஒரு அதிகாரி கூறும் போது, ​​“அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் தேர்வுகளை நடத்த மாநில பல்கலைக்கழகங்களுக்கு வினா வங்கிகள் தேவை. இதுபோன்ற வினா வங்கிகளைத் தயாரிக்க நேரம் எடுக்கும். எனவே, பல்கலைக்கழகங்கள் முழுவதும் தயாரிக்கப்படும் வினா வங்கிகள் பிற கல்லூரிகளுக்கு பகிரப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது” என தெரிவித்து உள்ளார். மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பதில் சிக்கல்கள் நிலவினால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இதற்கான வசதிகளை ஏற்படுத்தி பயன்படுத்தலாம்.

EMI செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் – ரிசர்வ் வங்கி தகவல்!!

அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த இரண்டு வாரங்களில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக்கூடும் என கூறப்படுகிறது. தேர்வுகள் ஒரு மணிநேரம் நீடிக்கும் மற்றும் ஒரு மதிப்பெண் வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். தமிழக அரசு ஏற்கனவே இறுதியாண்டு தவிர பிற செமஸ்டர் அரியர் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here