EMI செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் – ரிசர்வ் வங்கி தகவல்!!

0

வங்கி கடன்களுக்கான தவணைத் தொகை (EMI) செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்து உள்ளது. இதனால் EMI செலுத்தும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

EMI செலுத்த அவகாசம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் மிகவும் சரிந்து உள்ளது. இதனால் நடப்பு காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 விழுக்காடு சரிவடைந்து உள்ளது. இதற்கு கொரோனா பரவலால் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு விதிமுறைகளே முக்கிய காரணமாகும். இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதனால் வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகை செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

supreme court
supreme court

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கலக்கம்!!

இதனால் நிலுவையில் உள்ள வட்டிக்கு வட்டித் தொகை வசூலிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது குறித்து இன்று விளக்கம் அளித்த மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிர்வாகம் கடன் தொகைகளுக்கான EMI செலுத்தும் அவகாசம் மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் கூறியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் வட்டி வசூலிப்பு நடைமுறை குறித்து நாளை உரிய தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here