தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கலக்கம்!!

0

கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஆட்டம் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் 200 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் ஒரு சவரன் மீண்டும் 40 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தொழில்துறைகள் முடங்கியதால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது. இதன் விளைவாக விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. சவரன் 43 ஆயிரத்தையும் தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold-purchase
gold-purchase

ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டியது. ஆனால் இரண்டாவது வாரம் முதலே விலை தொடர்ந்து சரிந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இதனால் ஒரு சவரன் 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.

மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும் – மாநகர போக்குவரத்துத்துறை தகவல்!!

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,925க்கும், ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து ரூ.39,776 ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 2.50 ரூபாய் உயர்ந்து ரூ. 76.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here