மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும் – மாநகர போக்குவரத்துத்துறை தகவல்!!

0

தமிழக தலைநகர் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் மார்ச் மாதம் பயணிகள் எடுத்த 1000 ரூபாய் பஸ் பாஸை தற்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது.

பேருந்து சேவை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக பேருந்து பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இடையில் சென்னை உட்பட சில மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 20,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஒரு பேருந்திற்கு 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

RENEWAL-BUS
RENEWAL-BUS

பிரணாப் முகர்ஜி உடல் இன்று நல்லடக்கம் – தலைவர்கள் மரியாதை!!

இந்நிலையில் சென்னையில் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து பொதுப்போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால் மார்ச் மாதம் பயணிகள் எடுத்த 1000 ரூபாய் பஸ் பாஸை செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் குறைந்த நாட்கள் (ஒரு வாரம்) மட்டுமே பஸ் பாஸ் பயன்படுத்தப்பட்டது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகர போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here