பிரணாப் முகர்ஜி உடல் இன்று நல்லடக்கம் – தலைவர்கள் மரியாதை!!

0

கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் இன்று மதியம் 2 மணி அளவில் லோதி தோட்ட கல்லறையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பிரணாப் முகர்ஜி:

இந்தியாவின் தலைசிறந்த குடியரசு தலைவர்கள் பட்டியலில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. 84 வயதான அவருக்கு மூளையில் ஏற்பட்ட உறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொற்றும் அவருக்கு உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மிகவும் கவலைக்கிடமாக இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை ராணுவ மருத்துவமனையில் இருந்து ராஜாஜிமார்க்கில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ராணுவ வாகனங்களுக்கு பதிலாக ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம் – தொடங்கியது பேருந்து சேவைகள், திறக்கப்பட்டது கோவில்கள்!!

அவரது இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை அஞ்சலி செலுத்துவார்கள். பின்னர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் 12 மணிக்கு ராணுவ மரியாதை வழங்கப்படும். பின்னர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் மதியம் 2 மணிக்கு லோதி தோட்ட கல்லறையில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here