தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்களே., இந்த பகுதிகளில் கவனமாக இருங்கள்? SETC வெளியிட்ட அறிவிப்பு!!!

0

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளம் போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தரைப்பாலத்தில் அரசுப் பேருந்து ஒன்று, தண்ணீரில் சிக்கியதால் Emergency கண்ணாடி வழியாக பயணிகள் அனைவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு, விரைவு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ‘தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால், காட்டாற்று ஒர சாலைகளில் பேருந்துகளை இயக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். அதேபோல் சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால், மாற்று வழியில் பேருந்தை இயக்க வேண்டும்.’ என ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here