மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு மசாலா – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

0
potato fry
potato fry

சைவ உணவுகளில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கில் எந்த விதமான டிஷ் செய்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது உருளைக்கிழங்கு வைத்து ஒரு டிஷ் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

potato
potato

சிறிய உருளைக்கிழங்கு 1/2 கி.

மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா 1/2 தேக்கரண்டி

சீரகம் 1 தேக்கரண்டி

சோம்பு 1 தேக்கரண்டி

மிளகு 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி

பூண்டு 4 பல்

செய்முறை

முதலில் உருளை கிழங்கை முக்கால் பதம் வேக வைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு, மல்லித்தூள் போன்றவற்றை கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு இதனை நெறுநெறுவென்று அரைத்துக்கொள்ளவும்(குறிப்பு : தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும்).

baby potato
baby potato

இப்பொழுது கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அதன்பின் உருளைக்கிழங்கை சேர்த்து அடிபிடிக்காமல் வறுக்கவும். நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து சேர்த்து நன்கு வதக்கவும். அடிபிடிக்காமல் வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு மொறுமொறுப்பாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here