கர்ப்ப காலங்களில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணிடவே பண்ணிடாதீங்க!!

0

ஒரு பெண்ணுக்கு மகப்பேறு என்பது மிக புனிதமான ஒன்றாகும். அந்த மகப்பேறு காலங்களில் தனது குழந்தையை பெற்றெடுக்க தன்னையே அர்ப்பணிக்கிறாள். உலகத்தில் மகத்துவம் நிறைந்தது தாய்மையே என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. அந்த மகப்பேறு காலங்களில் செய்ய கூடாதவை என சில உள்ளன. வாங்க பார்க்கலாம்.

மகப்பேறு காலம்

ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து தனது குழந்தையை பேணி காக்கிறாள். மகப்பேறு காலத்தில் தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான் சேய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும். பெண்கள் உட்கொள்ளும் உணவு முறை மற்றும் செயல்கள் அனைத்தும் குழந்தைகளை சேரும்.

pregnancy time
pregnancy time

இதனால் தான் இந்த காலங்களில் நாம் எச்சரிக்கையாக இருப்பது. நல்லது. மேலும் பழங்கள், இயற்கை உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், வெண்ணெய் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும். கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது மிக முக்கியம். அதிலும் அரைக்கீரை சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகப்பேறு காலங்களில் செய்ய கூடாதா சில சிஷன்கள் உள்ளன.

செய்ய கூடாதவை

pregnancy
pregnancy
  • கர்ப்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது கூடாது.
  • முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக வாந்தி, தலை சுற்றல் போன்றவை ஏற்படும். இதற்கு மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்ள கூடாது.
  • கருவுற்ற பெண் மனஉளைச்சல், மனக்கஷ்டம், கோவம் அடைய கூடாது. இதனால் கருசிதைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • அடிக்கடி தாம்பத்ய உறவு, அலைச்சல் மற்றும் அதிக எடையை சுமப்பது கூடாது.
  • தலைக்கு மேல் எந்த பொருளையும் தூக்க கூடாது. சமநிலையற்ற நாற்காலி மற்றும் நைலான் சேர் போன்றவற்றில் அமர கூடாது.
  • மலம் சிறுநீர் அடக்குவது கூடாது. பசியுடன் இருப்பது கூடாது.
  • பேய் படங்கள் பார்ப்பது, கொலை, கொள்ளை மற்றும் மனக்கஷ்டம் நிறைந்த படங்களை பார்ப்பது கூடவே கூடாது.
  • வாகனங்களில் அதிகம் பயணிக்க கூடாது. மேலும் மாடி படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவது கூடாது. இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here