செப்.,9ல் திமுக பொதுக்குழு கூட்டம் – பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு!!

0

திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காணொளி வாயிலாக முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளில் மாநில கட்சிகள் இறங்கி உள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்வு, இடமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முக்கிய கூட்டங்கள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக பொதுக்குழு தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

durai-murugan-with-stalin
durai-murugan-with-stalin

இதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு முக ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னராக செப்டம்பர் 3ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

EMI செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் – ரிசர்வ் வங்கி தகவல்!!

மார்ச் 29ம் தேதியே திட்டமிடப்பட்டு இருந்த பொதுக்குழு கூட்டம் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக பொருளாளர் ஆக உள்ள துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு அவர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here