சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு., தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு., வெளியான அறிவிப்பு!!!

0
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு., தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு., வெளியான அறிவிப்பு!!!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இந்த தேர்வை, 16 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதி இருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மேற்கண்ட தளத்தில் தங்களது ரோல் எண், பள்ளி எண், ஐடி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு முடிவுகளை காணலாம். இதில் கடந்தாண்டை விட கூடுதலாக 0.65 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here