ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி (TET) தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக நூலகங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளது. சென்னை கோட்டூர்புறம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளை நிறைவடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்?? தமிழக அரசு திட்டம்!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் 7 ஆண்டுகள் செல்லும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here