கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க திட்டம் – ரயில்வே அமைச்சகம் தகவல்!!

0
Train
Train

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பயணிகள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்று முதல் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் ‘அன்லாக் 4’ வழிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க நாடு முழுவதும் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

ரயில்கள் இயக்கம்:

ஆகஸ்ட் 12 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்கமான பயணிகள் ரயில்களும் ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே கடந்த மாதம் அறிவித்திருந்தது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் ஆரம்பத்தில் 30 ராஜதானி போன்ற ஏசி ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஐஆர்சிடிசி ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அன்லாக் 4 வழிகாட்டுதல்கள் படி, செப்டம்பர் 7 முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. இருப்பினும், தற்போது இயங்கும் அனைத்து 230 சிறப்பு ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 25 முதல் அனைத்து வழக்கமான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமான ரயில் சேவைகளுக்கான முன்கூட்டியே முன்பதிவை ஏப்ரல் 15 முதல் ஐ.ஆர்.சி.டி.சி நிறுத்தியுள்ளது.

corona precautions
corona precautions

ஷ்ராமிக் சிறப்பு ரயில் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், மே 1 முதல் ஜூலை 9 வரை மொத்தம் 4,165 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், 63 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், இதுபோன்ற ரயில்களுக்கான தற்போதைய தேவை அனைத்தும் முழுமையாக உள்ளதாக அமைச்சகம் கூறி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா தொற்று இல்லை – சோதனை முடிவு வெளியீடு!!

இருப்பினும், இதுபோன்ற அதிக சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தால், நாங்கள் மீண்டும் இந்த சேவைகளை இயக்குவோம் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here