ஹைபிச்சில் சத்தமாக பாடும் அரியவகை நாய் – இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!!

0
singing dog
singing dog

நாய்கள் என்றாலே பலர் அஞ்சி ஓடுவதுண்டு. இது வரையில் கத்தி ஊளையிடும் நாய்களை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அழகாக பாட்டு பாடும் நாய் இந்தோனீசியாவில் உள்ள பப்புவா நியூ கினி காடுகளில் உள்ளன.

நாய்கள்

நாய்கள் எப்பொழுதும் நன்றி உள்ளது. இதனால் தான் அது செல்ல பிராணியாக கருதப்படுகிறது. பல வகையான நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறோம். நாய் மோப்பசக்தி நிறைந்தது. இதனாலேயே அதனை போலீஸ் துறையிலும் பயன்படுத்துகின்றனர். இதே போல் சில வெறி நாய்களும் உள்ளன. இதனாலேயே ரோட்டில் செல்ல அஞ்ச வேண்டி இருக்கும். இரவு நேரங்களில், விடியற்காலையில் தெருக்களில் இந்த நாய்களே ஆக்கிரமித்திருக்கும். தற்போது அரியவகை பாட்டு பாடும் நாய் கண்டறியப்பட்டுள்ளது.

singing dog
singing dog

உலகில் இந்த வகை நாய்கள் 200 தான் உள்ளன. அந்த நாய்களும் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வகை நாய் ஒன்று இந்தோனேசியாவில் உள்ள பப்புவா நியூ கினி காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நாய்கள் என்றாலே இரவில் நாராசமாக ஊளையிடும் ஆனால் இந்திய வகை நாய்கள் ஸ்ருதியுடன் இனிமையாக பாடுமாம். பாடுவதற்கென்றே பிரத்தியேக குரல்வளை மற்றும் நரம்பு மண்டலங்கள் உள்ளதாம். என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 1970 களில் அதிகளவில் காணப்பட்ட இந்த நாய்கள் கடந்த 50 வருடங்களில் முற்றிலும் அழிவை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here