மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா வைரஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை இயக்குநர்!!

0
மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா வைரஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை இயக்குநர்!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். தற்பொழுது சிங்கப்பூரில் புதிய வகை KP 2 கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமெடுத்துள்ளது.  இந்நிலையில் இந்த கொரோனா பரவல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த வைரஸ் ஒமைக்ரானின் மற்றொரு வகைதான். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டாலும் நோயாளி, விரைவில் குணமடைவார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here