IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான முக்கிய அப்டேட்!!

0
IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தின் மூலம் RCB அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் 33 ரன்களை குவித்ததின் மூலம் ஐபிஎல்  வரலாற்றில் 8000  ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனை படைத்த விராட் கோலிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here