தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். தற்போது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது GOAT தான். இந்த நிலையில் இப்படத்தின் ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. “சின்ன சின்ன கண்கள்” என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் அளவிற்கு விஜய் பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் GOAT படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.