Friday, May 17, 2024

ஒரு நொடிக்கு 178 டெராபைட்ஸ் – அதிவேக இணையவசதியை கண்டுபிடித்து அசத்தல்!!

Must Read

உங்களுக்கு ஒரு நொடியில் ஒட்டுமொத்த நெட்ஃபிக்ஸ்(Netflix) வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், ஆச்சிரியமாக உள்ளதா??சாத்தியமா? என்ற கேள்வி தான் உங்கள் மனதில் எழும் ஆனால் அதனை செய்து காட்டியுள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.

சூப்பர் பாஸ்ட்:

இந்த நூற்றாண்டில் அனைவர் கையிலும் மொபைல் உள்ளது. அதில் பயன்படுத்த இன்டர்நெட் வசதி உள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாருக்கேனும் இணையத்தை பயன்படுத்த தெரியாமல் இருக்குமா?? அப்படி நாம் பயன்படுத்தும் போது நாம் விரும்புவது அதிவேக இணையசேவையை தான். அதிலும் குறிப்பாக, இன்றைய தலைமுறையினருக்கு எதுவும் வேகமாக நடைபெற வேண்டும், உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??

record breaking fastest internet speed
record breaking fastest internet speed

இப்படி பலரின் குரல்கள் ஆராய்ச்சியாளர்களின் காதுகளில் விழுந்ததோ என்னவோ?? உலகின் மிக அதிவேகமான இன்டர்நெட் சேவையை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த சேவை மூலமாக ஒரு நொடியில் ஒட்டுமொத்த நெட்ஃபிக்ஸ்(Netflix) வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த எடுத்துக்காட்டு போதும், இவர்கள் கண்டுபிடித்திருக்கும் இணையவேகத்தின் அளவை சொல்ல.

அதிவேக சேவை:

இதற்கு முன்னதாக ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த அதிவேக இணையசேவையை முறியடித்துள்ளனர், ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது 150 Tbps. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இணையசேவை வேகமானது 178 Tbps (Terabits Per Second).

இந்த வேகம் தற்போது நாம் பயன்படுத்தும் சேவையை விட இருமடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனை ராயல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர் டாக்டர் லிடியா கால்டினோ மற்றும் எக்ஸ்டெரா மற்றும் கிட்டி ரிசர்ச் ஆகியோர் செய்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்:

இது குறித்து அவர்கள் கூறுகையில் “இந்த கொரோனா பரவலால் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை உருவானது, அப்படி இருக்கையில் அனைவரும் இணையத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்தினர். அதனால் இணைய வேகமானது மிகவும் குறைவாக தான் இருந்தது. அதனை எப்படி சரி செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் நங்கள் இதனை செயலாற்றினோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தனித்துவமான தொலைத்தொடர்ப்பு சாதனங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சத்திய கூறுகள் குறைவு தான்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -