ஜூம் ஆப் ஒரு மணி நேரம் செயலிழப்பு – மன்னிப்பு கூறிய நிறுவனர்!!

0
zoom app
zoom app

லாக்டவுன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ஜூம் செயலி 1 மணிநேரத்திற்கு செயல்படாததை அடுத்து அந்த நிறுவனர் மன்னிப்பு கூறியுள்ளார்.

ஜூம் செயலி

பள்ளி, கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஜூம் செயலி மூலமாகவே ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நிறுவனங்களின் மீட்டிங் போன்றவை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட உலகளவில் 30 கோடி மக்கள் ஜூம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

zoom app
zoom app

கடந்த திங்கள் கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் ஜூம் செயலி ஒரு மணி நேரமாக செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் , நிறுவனங்கள் செயலியில் இணைய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜூம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்பு கூறியுள்ளார்.

zoom app
zoom app

ஜூம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி ஏரிக் யுவான் அவர்கள் கூறுகையில், ஜூம் செயலி இன்று செயலிழந்ததிற்கு மிகவும் வருந்துகிறோம். இதனால் உங்கள் வகுப்பறை மற்றும் மீட்டிங் போன்றவற்றால் இடையூறு ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு நங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்கள் வகுப்பறை கூட்டங்கள் மற்றும் நிறுவன மீட்டிங் போன்ற நிகழ்வுகளை முறையாக நடத்த உதவுவது எங்கள் கடமையாகும்.

zoom app
zoom app

இது போன்ற தவறு இனி ஒருபோதும் நடைபெறாது. இது போன்ற தவறு நடக்காமல் இருக்க நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உங்கள் பொறுமைக்கும் உங்கள் வேலையில் நடந்த இடையூருக்கும் நங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here