Saturday, April 27, 2024

வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

Must Read

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை:

கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. முதலில் மிதமாக பெய்த மழை அடுத்தடுத்த நாட்களில் கனமழையாக பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி தான் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக எல்லா மாவட்டங்களிலும் 7 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்கள் 

குறிப்பாக பல இடங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக தான் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அது வலுப்பெற்றுள்ளதால் பரவலாக பல மாநிலங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எங்கு எங்கு மழை:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில், தேனீ, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமாக கனமழை பெய்யும் என்று சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்காக வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??

heavy rain due to monsoon
heavy rain due to monsoon

வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற வடகிழக்குந் மாநிலங்களில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024 கோப்பைக்கான போட்டி ஆரம்பம்.. பிளேஆப் போகப் போவது யாரு?

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -