Thursday, May 9, 2024

ஆறுமாத காலத்தில் மொபைல் சேவை விகிதத்தை உயர்த்த நடவடிக்கை – பாரதி ஏர்டெல் தலைவர் அறிவிப்பு!!

Must Read

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அடுத்த 6 மாதங்களில் மொபைல் சேவைகளின் விகிதத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார்.

பயனுறுக்கான சராசரி வருவாய்:

ARPU( average revenue per user) என்பது ஒரு பயனரால் ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் மாதவருவாய் ஆகும். இதனை உயர்த்தப்போவதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முடிந்த ஜூன் 30 காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் பயனுறுக்கான சராசரி வருவாய் 157 வரை அதிகரித்துள்ளது என்றும், அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவர் சுனில் தெரிவித்துள்ளார்.

சோகம் அளிப்பதாக இருக்கும் வருவாய்:

அவர் தெரிவித்துள்ளதாவது “ஒரு மாதத்திற்கு 16 GB டேட்டா அதுவும் 160 ரூபாய்க்கு வழங்குவது சரியில்லாத ஒன்று தான். நாங்கள் 50 முதல் 60 அமெரிக்கா டாலர் மதிப்பில் வருவாய் எதிர்பார்க்கவில்லை,ஆனால் ஒரு மாதத்திற்கு 2 டாலர் மதிப்பில் 16 GB டேட்டா என்பது சோகம் அளிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. தொலைதொடரப்பு இல்லாத வணிகங்களும் டிஜிட்டல் சேவையை பின்பற்றவேண்டும்.எங்களுக்கு ARPU 300 ரூபாய் வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் மூலமாக உங்களுக்கு மாதத்திற்கு 100 ரூபாயில் சரியாய் அளவில் டேட்டா வழங்கப்படும்.

bharathi airtel boss sunil mital
bharathi airtel boss sunil mital

ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் மற்றும் இதர அம்சங்களுக்கு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் கடுமையான காலங்களில் செயல்பட்டுள்ளனர் , அதனால் அவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படவேண்டும். ARPU அடுத்த 6 மாதத்தில் 200 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், 250 ரூபாய் வரை உயர்ந்தால் மிக சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், தொலைதொடரப்பு இல்லாத வணிகங்களும் டிஜிட்டல் சேவையை பின்பற்றவேண்டும்.” இப்படியாக அவர் பாரதி எண்டர்பிரைசஸ் நிர்வாகி அகில் குப்தா எழுதிய புத்தக வெளியீடு விழாவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்த அமலாக்கத்துறை பிரமாணம்., உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!!!

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -