Sunday, April 28, 2024

143 பேரின் காமப்பசிக்கு இரையாகிய பெண் – புகாரை படித்த போலீசாரே அதிர்ச்சி!!

Must Read

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 100க்கும் அதிகமானோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சித்திரவதைபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதை:

தெலுங்கானா மாநிலத்தின் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ரம்யா,25. இவர் பதற்றத்தோடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார், அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் ஒரு புகாரை அளித்துள்ளார், அதனை வாங்கி படித்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

போலீசார் அதிர்ச்சியடைந்ததற்கு காரணம் ரம்யா அளித்த புகார் தான். அதில் ரம்யா குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் கடந்த 10 ஆண்டு காலமாக பல காமக்கொடூரர்களிடம் கொடுமையை அனுபவித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டா ரெட்டி ரமேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இவர் தனது கணவன் குடும்பத்தாரால் பாலியல் வன்கொடுமையை அனுபவித்துள்ளார். இதனால் மனம் நொந்த ரம்யா விவாகரத்து பெற்று அவரது கணவன் குடும்பத்தினரிடம் இருந்து விலகியுள்ளார்.

கூட்டுபாலியல் வன்கொடுமை:

பின், தனது படிப்பை தொடர கல்லூரிக்கு சென்றுள்ளார், அங்கும் சில ஆண்களால் இவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த புகாரில் சில முக்கிய புள்ளிகளின் வாரிசுகளும் இடம் பெற்றுள்ளனர். சிலர் இவரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி உள்ளனர். இவரை நிர்வாணமாக்கி புகைப்படங்கள் எடுத்தும் மிரட்டியுள்ளனர்.

ரம்யாவை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தமாக இவர் கொடுத்த புகாரில் 143 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த புகாரால், மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -