Wednesday, May 15, 2024

மீண்டும் டிக் டாக் ஆ?? – பைட் டான்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேச்சு வார்த்தை!!

Must Read

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டிக் டாக் ஆப்யை இந்தியாவில் வாங்க பேரன்ட்ஸ் பைட் டான்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

டிக் டாக் தடை:

இந்தியாவில் அதிகமாக அனைவரும் பயன்படுத்திய செயலி என்றால் அது, டிக் டாக் என்னும் சீன செயலி தான். ஆனால், லடாக் பிரச்னை காரணமாக மத்திய அரசு இந்த செயலியுடன் மற்ற 49 சீன செயலிகளை தடை செய்து இருந்தது. நட்டு மக்களின் பாதுகாப்பு கருதியும் தனியுரிமை நலன் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.

ரயில் சேவை கட்டண தொகையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கலாம் – ரயில்வே துறை!!

ஆனால், இந்த செயலி இல்லாமல் பலரும் வேதனை அடைந்தனர். கூடுதலாக இந்த செயலியை மீண்டும் இந்தியாவில் அறிமுகபடுத்த இந்த செயலியின் நிறுவனமான “பைட் டான்ஸ்” பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஆர்.ஐ.எல்வுடன் பேச்சு வார்த்தையையும் நடத்தி உள்ளது.

வேலைவாய்ப்பு இழந்த ஊழியர்கள்:

இந்த இரு நிறுவனங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் செய்யவில்லை. டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்வதற்கு முன்னால் 200 மில்லியன் பயனாளர்கள் இருந்தனர். ஆனால், இந்த தடையால் டிக் டாக் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்து வந்துள்ளது, கூடுதலாக பலர் வேலையும் இழந்துள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

tik tok app
tik tok app

கிட்டத்தட்ட, 2000 பேர் வேலை இழந்ததால், இந்திய அரசிடம் பேசிப்பார்த்தும் எந்த பயனும் இல்லாததால், ஆர்.ஐ.எல் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

அதனால், தான் இந்த நிறுவனம் தொடர் பேச்சு வார்த்தையில் இறங்கி வந்துள்ளது. தற்போது, டிக் டாக் தடை நீக்கப்பட்டால் அதற்கு மட்டும் பயன் என்று சொல்ல முடியாது, கூடுதலாக இதன் மூலமாக அம்பானியின் நிறுவனத்திற்கும் பல பயன்கள் உள்ளன. இவர்களது வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்புகளையும் வழங்க முடியும் என்றும் கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -