ரயில் சேவை கட்டண தொகையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கலாம் – ரயில்வே துறை!!

0
train
train

இந்தியாவில் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தனியார் ரயில் சேவை கட்டணங்களை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தனியார் ரயில்வே:

உலகின் மிகப்பெரிய ரயில்வே துறை இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது தனியார் பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி நாட்டில் அதிகம் வருமானம் தரும் தடங்கள் பட்டியலிடப்பட்டு அங்கு தனியார் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரயில் சேவையில் ஈடுபட விரும்பும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் டிரான்ஸ்போர்ட் இந்தியா, ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், சீமென்ஸ் லிமிடெட், பாம்பார்டியர் உள்ளிட்ட 23 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் தனியார் துறை பிரதிநிதிகள் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதில் தனியார் ரயில் சேவையில் கட்டண நிர்ணயம் குறித்து கேட்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!!

அதற்கு ரயில்கள் இயக்கம், கொள்முதல்,வாடகை என அனைத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களே அதற்கான சேவை கட்டணத்தையும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்தியாவில் 2023ம் ஆண்டு முதல் தனியார் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here