முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!!

0

டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை வரை அவரது உடல்நிலை மாறாமல் இருந்தது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலை:

84 வயதான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகர்ஜியின் மூளையில் ஒரு பெரிய உறைவு கண்டறியப்பட்டது, அதற்காக அவருக்கு அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி வெண்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில், முகர்ஜியின் உடல்நிலை குறித்து போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி கேட்டுக்கொண்டு உள்ளார். அவர் “என் தந்தை எப்போதும் ஒரு போராளி! எனது தந்தைவிரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு நலம் விரும்பினரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

கார் இருளாய் இருந்த வெள்ளையர்களை நள்ளிரவில் வெற்றி கொண்டோம் – 74 வது சுதந்திர தினம் நாளை!!

பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார். அவர் ஜூலை 2012 முதல் 2017 வரை பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here