பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களே., இந்த தேதி முதல் துணைத் தேர்வு., கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் (மே 6) வெளியிடப்பட்டது. இதில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலான தேர்ச்சி விகிதம் வந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், வரும் 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிகளிலே விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு பாடத்திற்கான கட்டணம் ரூ.150 எனவும், இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் ஜூலை 1 ஆம் தேதிக்குள் துணைத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (08.05.2024)., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here