Thursday, May 16, 2024

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!

Must Read

தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர்.

காணொளி வாயிலாக ஆலோசனை:

கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை தகவல்!!

இன்று, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அவர் தலைமை செயலகத்தில் இருந்து பங்கேற்றார்.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து கொண்டு தான் வருகிறது. சென்னையில் குறைந்துள்ளது என்று சொன்னாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து தான் வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு தான் வருகிறது.

முதல்வர் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்றும் மாவட்டங்கள் வாரியாக விளக்கினார். மேலும், கொரோனா பணிகளுக்காக முதல்வர் பிரதமரிடம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியறுத்தி உள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

tamilnadu cm
tamilnadu cm

மருத்துவ உபகாரணங்களுக்காக 3000 கோடி வேண்டும் என்றும், தொழில் துறையை மேன்படுத்த 1000 கோடியும், பொருளாதாரத்தை மேன்படுத்த 9000 கோடியும், என மொத்தமாக 16,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலமாக தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி பேசியதோடு, நிதி ஒதுக்குவது பற்றியும் முதல்வர் பேசி உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -