அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் அதற்கான பணிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் 90 சதவீதம் வரை முடித்து விட்ட காரணத்தால், அரசுப்பள்ளிகளிலும் உடனே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள காரணத்தால் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை தகவல்!!

எனவே வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 1,6,9 வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 24ம் தேதி 11ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் மாணவர் சேர்க்கையின் பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, அன்றே மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here