Thursday, May 2, 2024

“800” படத்தின் மோஷன் போஸ்டர் – விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

Must Read

நேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள “800” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால், இந்த போஸ்டரை கண்டு பலரும் தங்களது எதிர்ப்புகளை ட்வீட் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

“800” படம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கருதப்படுபவர், விஜய் சேதுபதி. அவர் சிறந்த நடிகராக மட்டும் அல்லாமல் தமிழ் உணர்வாளரும் கூட. அப்படி இருக்க அவர் நடிப்பில் ஸ்ரீலங்காவின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை கதையினை “800” என்ற பெயரில் ஸ்ரீபதி என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அவரை தமிழ் சினிமாவில் முன்னேற உதவிய இயக்குனர் சீனு ராமசாமி கூட இதனை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

"800" movie poster
“800” movie poster

அதே போல் பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்று தான் எதிர்பார்க்கபட்டது. ஆனால், நேற்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் தற்போது விஜய் சேதுபதிக்கு எதிராக #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் ட்வீட் செய்துள்ளனர்.

முரளிதரன் மீது உள்ள குற்றசாட்டு:

இந்த படத்திற்கு ஏன் இந்த எதிர்ப்பு என்று பார்த்தால், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான இவர் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர்.

அப்படி இருக்க முரளிதரன் இலங்கை இன படுகொலை போராட்டத்தின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. அதே போல் முரளிதரன் இன படுகொலையின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

வலியால் துடிக்கும் கண்ணம்மா, பிரசவம் பார்க்கப்போகும் வெண்பா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

இதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்று பெரிதும் நம்பப்பட்ட நிலையில் போஸ்டர் வெளியானது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் கடைசி படம் இதுவாக தான் இருக்கும் என்று பலரும் சூளுரைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -