முதலிடத்தை பிடிக்குமா டெல்லி கேபிட்டல்ஸ் – இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!!

0

ஐபிஎல் 2020 சீசனில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ராணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பு டெல்லி அணிக்கு உள்ளதால், அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டெல்லி vs ராஜஸ்தான்:

ஐபிஎல் 2020 தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதி உள்ளன. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. ஆனால் இப்போது, ​​சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் ஸ்டீவ் ஸ்மித்தின் அணி உள்ளதால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்து முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

டெல்லி அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இந்திய வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளனர். பவுலிங்கில் சூழல் மன்னன் ரவி அஸ்வின், வேக பந்துவீச்சில் காகிசோ ரபாடா என அசுர பலத்துடன் உள்ளது. இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல டெல்லி அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் திரும்பி உள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோரும் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளனர். தோல்வி அடைய இருந்த 2 போட்டிகளை வெற்றிப்பாதைக்கு திருப்பிய அதிரடி ஆல் ரவுண்டர் ராகுல் தவதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய தூணாக உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்கில் அதிரடி காட்டினால் வெற்றி பெறலாம்.

ஐபிஎல்.,லில் இதுவரை இரு அணிகளும் 21 முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர். அதில் ராஜஸ்தான் டெல்லியை விட 11-10 என்ற கணக்கில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் உத்தேச 11 அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், அஜின்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (c), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (wk), ஆக்சர் படேல், ஹர்ஷல் படேல், ரவி அஸ்வின், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச 11 அணி: பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (wk), ஸ்டீவ் ஸ்மித் (c), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா / மனன் வோஹ்ரா, ரியான் பராக், ராகுல் தவதியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here