தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு!!

0

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் வேலை நாட்களும் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

பதவிக்காலம் நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்த நிலையில், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களின் ஓய்வில்லாத உழைப்பின் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால், சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

TamilNadu Chief Secretary - Mr Shanmugam IAS
TamilNadu Chief Secretary – Mr Shanmugam IAS

அதில் ஒன்றாக அரசுத்துறைகளில் புதிதாக பணியிடங்களை உருவாக்க தடை செய்யப்பட்டது. இதனால் ஏற்கனவே பணியில் உள்ள உயர் அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு!!

இது தொடர்பாக மத்திய பணியாளர் நியமனத் துறைக்கு தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட காரணத்தால் 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here