மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு!!

0

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு நீட் தேர்வு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், தேர்வினை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வில் வெற்றி அடைய தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வசதியின்மை காரணமாக அரசு சார்பில் இலவச வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் தனி உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென ஓய்வு பெற்ற நீதிபதி சார்பில் அமைக்கப்பட்ட குழு 10% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த நிலையில், தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

medical exams
medical college

ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதால் சட்டமாக இயற்ற ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெளியாக உள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அவசர வழக்காக இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உள் ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவு என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை உடனடியாக வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக ஆளுநரின் செயலருக்கு அனுப்பவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here