தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நடவுப் பணிகளில் விவசாயிகள் இறங்கி உள்ளனர்.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மேலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானத்தின் நிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35ºC மற்றும் 26ºC ஆக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு 700 சிறப்பு பேருந்துகள் – டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!!

கொமொரின், மன்னார் வளைகுடா, கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here