தீபாவளிக்கு 700 சிறப்பு பேருந்துகள் – டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!!

0

தமிழகத்தில் வெளியூரில் பணியாற்றுபவர்கள், வசிப்பவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்காக செல்வது வழக்கம். இதனால் அந்நாட்களில் அரசு சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்முறை 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து பொதுப்போக்குவரத்து சேவை கடந்த செப்.1ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. மக்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் முக்கிய நகரங்களுக்கு ஏசி முதல் சாதாரண இருக்கை வசதி கொண்ட 700 பேருந்துகள் இம்முறை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பேருந்து பொதுப்போக்குவரத்தில் தற்போது மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணித்து வருகின்றனர்.

மகிழ்ச்சி திளைப்பில் இல்லத்தரசிகள் – தாராளமாக குறைந்த தங்கத்தின் விலை!!

தற்போது தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் 700 சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதள பக்கத்தில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என SETC அறிவுறுத்தி உள்ளது. மேலும் முன்பதிவு எண்ணிக்கையை பொறுத்து அதிகளவிலான பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here