Friday, April 19, 2024

‘சின்ன மச்சான், என்ன புள்ள’ – பிக் பாஸில் அனிதா சம்பத் & சுரேஷ் செம குத்தாட்டம்!!

Must Read

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் ஆச்சர்யம் அடையும் வகையில் அனிதா மற்றும் சுரேஷ் இணைத்து குத்தாட்டம் போட்டுள்ளனர். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே சண்டையிட்டு வந்த நிலையில் திடீரென சமாதானம் ஆகி விட்டது ரசிகர்களுக்கு ஷாக் ஆக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 4:

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பபட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் துவக்கத்தில் இருந்தே சிலர் சண்டையை ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக சனம் செட்டி, சுரேஷ், அனிதா இவர்கள் மூவருக்கும் இடத்தில் மோதல் வெடித்தது.

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் ஷாக்!!

அதில் முதல் மூன்று நாட்கள் ப்ரோமோவில் இருந்தது அனிதா மற்றும் சுரேஷ் சண்டை. ஆரம்பத்தில் இருந்தே இருவரும் வெகுநாள் எதிரிகளை போல் சண்டையிட்டு கொண்டனர். தற்போது சுரேஷ் மற்றும் ரியோ ஆகியோருக்கு சண்டை ஆரம்பித்துள்ளது.

ரசிகர்கள் குஷி:

இதனால் அவர் அனிதாவை டீலில் விட்டு விட்டார் போல, காரணம் இன்றைய ப்ரோமோவில் அனிதாவுடன் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். “சார்லி சாப்ளின் 2” படத்தில் உள்ள “சின்ன மச்சான்” பாடலுக்கு இருவரும் நடனம் ஆடியுள்ளார். இவருவரும் அந்த பாடலில் வருவது போல உடை அலங்காரமும் செய்துள்ளனர். பாடலுக்கு ஏற்ப சரியாக குத்தாட்டமும் போட்டுள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பாடலின் முடிவில் இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பினை பகிர்ந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் கத்தி தங்களது ஆரவாரத்தை தெரிவித்தனர்.

சண்டை போட்டவர்கள் இப்படி டூயட் குத்துப்பாட்டிற்கு அடியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -