Sunday, May 5, 2024

தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!!

Must Read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் இன்று அதிகாலை பொழுதில் கரையை கடந்தது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடம் கேட்டறிந்தார்.

அதிதீவிர “நிவர் ” புயல்

கஜா என்ற புயல் போன ஆண்டு ஒரு பெரும் ஆட்டத்தை தமிழகத்திற்கு காட்டிவிட்டு போனது. அந்நிலையில் இந்த ஆண்டு நிவர் என்ற புயல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானது. இந்த நிவர் அதிதீவிர புயலாக நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கு அருகில் உள்ள காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே வலுவிழந்து கரையை கடந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

nivar cycclone attack tmilnadu and pudhucheeri
nivar cycclone attack tmilnadu and pudhucheeri

கரையை கடந்த பிறகும் இதன் தாக்கம் 8 மணிநேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிதீவிர புயல் வலுவிழந்து கரையை கடந்த பிறகு இதன் தாக்கம் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளையும், புதுச்சேரியில் பல பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அமித் ஷா உறுதி

நிவர் புயலினால் சென்னை மற்றும் அதன் உட்பட பகுதிகளிலும், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையோடு பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

amit shah get information of nivar cyclone
amit shah get information of nivar cyclone

இந்நிலையில் நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தந்த மாநில முதல்வர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசே ஏற்கும் என்று இரண்டு மாநில முதல்வர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -