Sunday, April 28, 2024

மும்பை தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு – ட்விட்டரில் ட்ரெண்டிங்!!

Must Read

இந்தியாவில் உள்ள வர்த்தக நகரமான மும்பையில் இதே நாள் 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்று ட்விட்டரில் #MumbaiTerrorAttack என்ற கேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

வர்த்தக நகரம் மும்பை:

இந்தியாவில் உள்ள பல நகரங்களில் முக்கியமான நகரமாக கருதப்படுவது, மும்பை. இது நம் நாட்டின் சிறந்த வர்த்தக நகரமாகவும் பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி மக்களை அச்சம் அடைய வைத்தனர். அரசு சார்பில் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பல மக்கள் காயமடைந்தனர். அதே போல் 10 வெளிநாட்டவர் உட்பட 166க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற போலீசாரும் போராடினர். 18 போலீசார் தங்களது உயிரினை தியாகமும் செய்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த தாக்குதலில் அப்போது தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே மற்றும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர் ஆகியோர் மரணம் அடைத்தனர். மும்பை மாநகரை 10 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் ஆக்கிரமித்தனர். அவர்களில் 9 பேரை போலீசார் சாதுரியமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தனர். அவர்களில் ஒரு தீவிரவாதியான அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். பின், அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தாக்குதல் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. இந்த தாக்குல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் #MumbaiTerrorAttack என்ற கேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.

“நிவர்” புயல் எதிரொலி – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!!

சமூகவலைத்தளங்களில் பலரும் இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களை நினைவு கூர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -