அழகான மற்றும் சிவப்பான முகத்தை பெற “ரோஸ் வாட்டர்”- சூப்பர் டிப்ஸ் இதோ!!

0

உங்கள் முகத்தின் நிறத்தை வெள்ளையாகவும், மென்மையாகவும் வைக்க வேண்டுமா? சிறு வயதில் நம் முகம் தொட்டு பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும். நாளடைவில் பருக்கள், கரும்புள்ளிகள், குழிகள் போன்றவையினால் தோல் கடினமாக மாறிவிடும். இவையனைத்திற்கும் சிறந்த தீர்வு ரோஸ் வாட்டர்.

முகத்தை பாதுகாக்கும் ரோஸ் வாட்டர்:

சருமத்தை பராமரிப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் அனைவருக்குமே தெரியும் பியூட்டிபார்லர் போன்ற இடங்களில் பேஷியல், ப்ளீச் போன்ற எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பு ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுவது வழக்கம். ஏனென்றால், ரோஸ் வாட்டர் நம் சருமத்தை பாதுகாக்கும். சிறந்த டோனர் ஆகவும் பயன்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தினமும் வீட்டில் காலை எழுந்தவுடன் முகத்தை சோப் அல்லது பேஸ்வாஷ் கொண்டு கழுவிட்டு சுத்தமான காட்டன் துணியால் துடைத்த பின்னர் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்வதால் முகம் சிவப்பாக மாறும். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முகத்தில் உள்ள தூசுகள், அழுக்குகள் நீங்கும். வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் முகத்தில் ரோஸ் வாட்டர் தெளித்து ஒரு காட்டன் பஞ்சால், முகத்தில் உள்ள கிரீம்களை துடைத்து எடுக்கலாம். இப்படி செய்யும்பொழுது முகம் மேக்கப் செய்தது போன்றே இருக்கும். ஆனால், தூசு மற்றும் கிரீம்கள் மட்டும் நீங்கிவிடும். முகத்திற்கு எந்த கிரீம்களை பயன்படுத்தினாலும் அதற்கு முன் சிறிது ரோஸ் வாட்டரை முகத்தில் தடவினால் முகம் பாதுகாப்பாக இருக்கும்.

கணினியில் வேலை செய்பவர்கள் தூக்கம் வரும்போதெல்லாம் ரோஸ் வாட்டரை முகத்தில் அடித்து கொள்ளலாம். தூக்கம் வராமல் இருப்பதுடன் முகம் பார்ப்பதற்கு அழகாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ரோஸ் வாட்டர் பேஷ்மாஸ்க் போடுவதற்கு முன் பயன்படுத்தலாம். நைட் கிரீம் உபயோகிப்பவர்கள் கிரீம் போடுவதற்கு முன் முகத்தில் ரோஸ் வாட்டரை தேய்த்துவிட்டு பயன்படுத்தினால் பக்க விளைவுகளை தவிர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here