Sunday, May 12, 2024

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 தேர்வு – TNPSC அறிவிப்பு!!

Must Read

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.

கொரோனா பரவல்:

நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல தேர்வுகள் பொது முடக்கம் காரணமாக தேதிகளை அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுகளை தேதிகளை குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது, கொரோனா பரவல் குறைந்து வரும் காரணமாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையையும் கருத்தில் கொண்டும் குரூப் 1 தேர்வுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தின் செய்தி குறிப்பு:

இது குறித்து டிஎன்பிசி செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் “குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள 69 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படும். தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர் பதவிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.”

TNPSC
TNPSC

விஜயகாந்த் & பிரேமலதா இன்று வீடு திரும்புகிறார்கள் – மருத்துவமனை அறிக்கை!!

“இந்த பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு அடுத்த வருடம் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய தமிழநாடு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X