மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?? இன்று சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் உடன் மோதல்!!

0

மூன்று முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் ஏற்பட்ட தொடர் தோல்விகளில் இருந்து வெளிவர இன்று கடுமையாக போராட வேண்டி உள்ளது. எம்எஸ் தோனி தலைமையிலான அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் அதன் முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவிய நிலையில், அதிலிருந்த மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், 6 நாள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணி களமிறங்க உள்ளதால் கடின பயிற்சி வீரர்களுக்கு கைகொடுக்கும் என நம்பிக்கை உள்ளது என சென்னையின் பயிற்சியாளர் தெரிவித்து உள்ளார். அம்பதி ராயுடு மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளது பலத்தை அதிகரித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 2 போட்டிகளை இழந்தாலும் 3வது போட்டியில் வெற்றிக்கனியை பறித்தது. இன்றும் அதே உற்சாகத்துடன் களமிறங்குவதால் சிஎஸ்கே வீரர்களுக்கு சற்று சிக்கல் தான். டாப் ஆர்டர் கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய வீரர்களுடன் அசுர பலத்துடன் உள்ளது. முந்தைய போட்டியில் அசத்திய ஆல்-ரவுண்டர் அப்துல் சமத் இந்த போட்டியிலும் களமிறங்க வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் சன் ரைசர்ஸ் அணி தனது அணியில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. மேலும் புள்ளிப்பட்டியலிலும் 7வது இடத்தில் உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய இவ்விரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

உத்தேச 11 அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பதி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ் தோனி, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, சாம் கரண், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹேசில்வுட் / ஷேன் வாட்சன்.

சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, அப்துல் சமத், அபிஷேக் சர்மா, பிரியாம் கார்க், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி நடராஜன்.

ஆடுகளம் எப்படி இருக்கும்??

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச தீர்மானிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் பிற மைதானங்களுடன் ஒப்பிடுகையில் துபாய் சற்று பெரிய மைதானம் என்பதால் சிக்ஸர்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும்.

நேருக்கு நேர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 9 போட்டிகளில் வென்றதால், சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை விட ஒரு படி மேலே உள்ளது. இது வீரர்களின் நம்பிக்கையை சற்று அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here