Saturday, May 4, 2024

விஜயகாந்த் & பிரேமலதா இன்று வீடு திரும்புகிறார்கள் – மருத்துவமனை அறிக்கை!!

Must Read

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த ஆகிய இருவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவ நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று:

கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனை சென்ற போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. அதனால் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விஜயகாந்த் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பரிசோதனையின் போது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து பார்த்ததில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கு கடந்த 28ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக விஜயகாந்த அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை அறிக்கை:

இந்நிலையில், மருத்துவமனை சார்பில் இருவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த மற்றும் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த ஆகிய இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது.”

புதிதாக 95,000 அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம் – மாநில முதல்வர்!!

“தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். சிகிச்சை பலனாக அவர்கள் இருவரும் இன்று வீடு திரும்புவார்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -