இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள் – உலகளவில் 2வது இடம்!!

0
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல் - 12 வயது சிறுமி பலி! சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல் - 12 வயது சிறுமி பலி! சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!

பிற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் தாக்கம் இன்றளவும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 84,222 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. இவற்றில் 76% பாதிப்பு 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய இறப்புகளில் 82% 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,121 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,00,194 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா இறப்புகளின் அடிப்படையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் உள்ளது.

புதிதாக 95,000 அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம் – மாநில முதல்வர்!!

“ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் கவலை அளிப்பதாகவும், இருப்பினும் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது கவலை அளிப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கில் தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here