புதிதாக 95,000 அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம் – மாநில முதல்வர்!!

0
VIP களுக்கு அடித்த ஜாக்பாட் - மாநிலத்தில் 2 நாட்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!
போட்றா வெடிய., வேலையில்லா பட்டதாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் - நிதி அமைச்சர் பிடிஆர் அதிரடி!!

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வேலையின்மை பிரச்சனையை சரிசெய்யும் பொருட்டு 95,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை கேரளாவில் கொண்டு வரப்பட்டு உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.

புதிய வேலைவாய்ப்புகள்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவியது. இதனால் இந்தியாவில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தொழில்துறைகள் முடங்கியதால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர். இதனை சரிசெய்யும் பொருட்டு கேரள அரசு புதிய திட்டத்தை துவக்கி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி 95,000 வேலைகளை உருவாக்குவதே இலக்கு. அதில் குறைந்தது 50,000 வேலைகள் டிசம்பர் மாதத்திற்குள் உருவாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இந்த நோக்கத்திற்காக தொடங்கப்படவுள்ள சிறப்பு இணைய பக்கத்தில் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் விரிவான புள்ளிவிவரங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

pinarayi-vijayan
pinarayi-vijayan

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 18,600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும். உயர்நிலைப் பள்ளிகளில் 425, உதவி பெறும் கல்லூரிகளில் 700 மற்றும் 300 தற்காலிக பணியிடங்கள் உயர் கல்வித்துறையில் உருவாக்கப்பட உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,911 பதவிகளுக்கான நியமனங்கள் முறைப்படுத்தப்படும். மருத்துவக் கல்லூரிகளில் 700 பதவிகளும், பொது சுகாதார அமைப்பில் 500 பதவிகளும் உருவாக்கப்படும்.

தடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது – தலைவர்கள் கண்டனம்!!

பொதுத்துறை நிறுவனங்களில், 1178 நிரந்தர பணியிடங்கள், 342 தற்காலிக பணியிடங்கள் மற்றும் 241 ஒப்பந்த பணியிடங்கள் உட்பட 42 பிரிவுகளில் 1,761 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை துறை 100 நாட்களில் 23,100 வேலைகளை உருவாக்கும். கூட்டுறவு துறையில் குறைந்தது 17,500 வேலைகளும் மற்றும் பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here