விக்ரமின் “தங்கலான்” எப்போ ?? அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்.. குஷியில் ரசிகர்கள்!!

0
விக்ரமின்

தமிழ் சினிமாவில் சியான் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதில்  இவருடன் சேர்ந்து நடிகை மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கலான் குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களே., மீண்டும் பள்ளி திறப்பு இந்த தேதியில் தான்? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

அதாவது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இசை மிகவும் தனித்துவமாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். அதை உங்களுக்கு திரையில் காட்ட ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் கோடை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here